பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

 செய்யப்பட்ட பந்து என்று அவன் கூறுவது ஆங்கி லேய அதிகாரிக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

"இளைஞன் ஆடியது வெறும் விளையாட்டல்ல. குறி தவருமல் குதிரையை வேகமாக ஒட்டியபடி ஒரு பொருளை அடிக்க முடியம் என்ற ஒரு சிறந்த திறன் (Skill) தான்."

அது போலவே தாங்களும் ஆடி மகிழ விரும்பி னர். அது போல ஒரு பந்தை எங்கிருந்தோ ஒருவ ரிடம் பெற்றுக் கொண்டனர். ஆளுக்கொரு குதிரையில் ஏறி பலராகச் சேர்ந்து கொண்டு, அங்கு மிங்கும் அடித்தாடி மகிழ்ந்தனர்.

இவ்வாறு தினம் அவர்கள் ஆடப் போகுமுன், வாருங்கள் போலோ (Polo) ஆடப் போகலாம் என்று அழைத்துக் கூப்பிட்டனர். மணிப்பூர் இளைஞன் புலு என்று கூறிய சொல்லானது, மொழி பெயர்ப்பாளர் மூலமாக அறிந்து, அவர்கள் தங்களுக்கு இயல்பாக வருவது போல, 'Polo’ என்று அழைத்துக் கொண்டனர் போலும்.

‘போலோ ஆட வாருங்கள் என்று அழைத் ததே, அந்த ஆட்டம் போலோ ஆட்டமாக மாறி வந்துவிட்டது. அதனைத் தமிழில் குதிரைப் பந்தாட் டம்' என்று நாம் கூறுகிருேம்.