பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


57 அதற்குரிய பந்தோ மட்டையோ எதுவும் இல்லை. ஆசைப்பட்ட மனதுக்கு அறிவு துணை தந்தது. எப்படி? - அங்கே, குத்துச் சண்டை போடும் கையுறைகள் lெoves) கீழே கிடந்தன. அவற்றை எடுத்து வேடிக் கையாக அங்குமிங்கும் வீசினர். ஒருவர் மேல் ஒருவராக தமாஷாக எறிந்து கொண்டார்கள். அவர்களிலே ஒருவன், அடிதாங்க மாட்டாமலோ என்னவோ தெரியவில்லை. பக்கத்தில் கிடந்த விளக்குமாறு ஒன்றைத் துரக்கிக் கொண்டு தன்னை நோக்கி வரும் கையுறைகளை யெல்லாம் தடுத்துக் கொண்டிருந்தான். ஒருவர் வீச இன்னொருவர் தடுக்க, இதை அங்கு வந்த ஒருவர் பார்த்தார். அவர் பெயர் orrigg aspstairésiré grairl 15 (Geroge W Hancock). இதையே ஒரு விளையாட்டாக ஆக்கிவிட்டால் என்ன என்று யோசித்தார். விளக்குமாற்றின் அடிக் கட்டையே மட்டையாக, கையுறையே பந்தாக மாற, அன்றைக்கு ஆனந்தமாக ஒரு புது பிட்டத்தை ஆடி முடித்து விட்டார்கள். இதற்கென்று ஒரு சில விதி முறைகளை அமைத்து, பந்தும் மட்டையும் என்பதாக ஒன்றை உருவாக்கி, உள்ளாடும் தளப் பந்தாட்டம் (Indoor base ball) என்ற பெயரையும் சூட்டி விட்டார். இந்த ஆட்டத்தை சுற்றுப் புறம் தடுப்புள்ள உள்ளாடும் அரங்கத்தில் மட்டுமே ஆடலாம் என்று