பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

 நமது ஆராய்ச்சிக்கு உறுதுணையாக அமைந்: திருப்பது ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய மாகும்.

தொல்காப்பியத்தில் வருகின்ற ஈரடிகளைக் கொண்டு ஆராய்வோம்.

'மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அகத்திணை புறனே'

கொற்றவை என்பவள் காளி. துடி என்பது மேளத்தைக் குறிப்பது. அந்தத் துடி வகையில் சிறிய மேளம் போன்றவற்றைக் குறிக்க சடு குடுக்கை, குடுகுடுப்பை என்னும் பெயர்கள் உண்டு.

காளிக்குப் பலியிடும்பொழுது, சடுகுடுக்கை அல்லது குடுகுடுப்பை என்ற பறை ஒலி எழுப்பி வருவது பண்டைய தமிழர் மரபு என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பண்டைய வீரர்கள் ஏன் காளிக்குப் பலி கொடுத்தார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டு மல்லவா? பண்டைத் தமிழ் அரசர்களின் போர்முறையே பேரதிசயம் நிறைந்தவை. நீ தி க் கு ப் புறம் போகாத நெஞ்சழுத்தம் நிறைந்தவர்கள். ஆகவே அவர்களின் அறநெறிப் போர் முறைகளில், போரை நேரடியாகத் தொடங்குமுன், எதிரி