பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:Rh21. மார தான் ஒட்டம்


கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரத்தின் மீது, பாரசீகத்தார் படையெடுத்துத் தாக்கும் போது, போர் நடைபெற்ற இடம் மாரதான் என்ற இ. டமாகும் Hill பராக்கிரமம் மிகுந்த பாரசீகப் படை, ஏதென் சைப் பயங்கரமாகத் தாக்குவதில் ஈடுபட்டிருந்த பொழுது, ஏதென்ஸ் படையும் எதிர்த்துத் தாக்கியது. இருந்தாலும், இந்தப் போரில் வெற்றி பெறுவோமோ மாட்டோமோ என்ற சந்தேகம். எனவே, உதவிப் படை ஒன்று வந்து விட்டால், இந்தப் பாரசீகப் படையை பஞ்சாக விரட்டி அடித்துவிடலாம் என்ற நம்பிக்கை. ஏதென்ஸ் படைத் தலைவன், பிடிப்பைட்ஸ் என்ற வீரனை அழைத்து, ஸ்பார்ட்டா என்ற நாட் டிற்குப் போய், உதவிப்படை கேட்டு வருமாறு தூது அனுப்பினன். வாகன வசதியோ அல்லது பிரயாண வசதியோ எதுவும் இல்லாமல், அந்த வீரன் ஒட்ட மும் நடையுமாகவே போனன். சேரவேண்டிய துரம் 115 மைல். திரும்பிவரும் துாரமும் அவ்வளவு தானே. இத்தனை தூரத்தையும் பிடிப்பைட்ஸ் ஒடியே திரும்பின்ை. -