பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


இவன், தன் வீரர்கள் இருவரை, ஒரு கல்லின் மீது உட்கார்ந்தபடியே, தோல்களால் கட்டி மூடிய கைகளால், முகத்தில் ஓங்கிக் குத்திக் கொள்ளச் செய்தான்.

பிறகு, அவர்களில் யாராவது ஒருவர் இறக்கும் வரை சண்டையைத் தொடரச் செய்தான். சண்டையில் ஒருவர் இறக்க அதிக நேரம் பிடித்த தால், உலோகத்தால் செய்த கம்பிமுட்களை, தோலில் பொருத்தச் செய்து, குத்துச் சண்டை. போடவைத்தான்.

இவ்வாறு பயங்கரக் குத்துச் சண்டையாக, குத்துச் சண்டை வளர்ந்தது. ஒரே குத்தில் முகத்தில் இரத்தம் பெருக வைத்து, ஆளேக் கொன்று குவிக்கும் ஆற்றல் வீரர்களிடையே பெருகி, வெறி பிடிக்கும் விதத்திலும் வளர்ந்தது.

கிரேக்க நாடு ரோமானியர்களிடம் தோற்று, அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. ரோமானி யர்கள் இந்தக் குத்துச்சண்டை போடும் விதத்தை வெறுக்கவில்லை. மாருக ரசித்தார்கள். அதில் அதிக ஆர்வமும் காட்டினர்கள்.

கிரேக்கர்கள் காட்டிய ஆர்வத்தை விட, ரோமானியர்களிடையே ஒரு புதிய வேகமும் இருந்தது. அத்துடன் அவர்களிடையே ஒரு புதிய குயுக்தியும் பிறந்தது.

75