பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

 பெருக்குவதற்காக எழுந்த விளையாட்டல்ல இது. நிகழ்ச்சியுமல்ல. இது அவர்களைப் போரிலே முழுதும் பயன் படுத்திக் கொள்வதற்காகப் படைக்கப் பட்டத் தூண்டு கோலாகும். வேலையுமாகும்.

அந்தக் காலத்தில், போர் வீரர்கள், தங்களுக்குத் தேவையான தளவாடங்களை, முடிந்ததைத் தூக்கிச் செல்லவும், முடியாதவற்றைப் பார வண்டிகளில் போட்டு இழுத்துச் செல்லவும் வேண்டியிருந்தது. அவ்வாறு பார வண்டிகளை இழுத்துச் செல்வதற்கு இடுப்புக்கு மேலே உள்ள உடல் பகுதிக்கு நல்ல வலிமையும் ஆற்றலும் தேவைப்பட்டது.

ஆகவே, நீண்ட கயிற்றினைக் கொடுத்து, இரு புறமும் மமான எண்ணிக்கையுள்ள வீரர்களை நிறுத்தி, இழுத்துப் பார்க்க விட்டனர். போட்டி யுணர்ச்சியுனே இயற்கையிலேயே எழுகின்ற வெறியுணர்ச்சிடயும் மேலோங்க, அவர்கள் பற்றி இழுத்து, தள்ளிவிடுகின்ற பேராற்றலில் மேலோங்கினர்

இவ்வாறு இழுத்துப் பழகிய உரமும் திறமும், அந்த வீரர்களுக்கு, போர்த் தளவாடங்களையும், தட்டு முட்டு சாமான்கள் போன்றவற்றையும் வைத்திருக்கின்ற பாரவண்டிகளை எளிதாக விரும்பிய இடங்களுக்கு இழுத்துச் செல்ல உதவியது.