பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100


பாகும், இதில் ஒரு உடலாளர் 10 போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இரண்டே நாட்களில் போட்டியிட்டு முடிக்கவேண்டும் - இந்தப் பத்து நிகழ்ச்சிகள் 1) 100மீ 2)400மீ 3)1500மீ 4) 110மீ தடை தாண்டும் போட்டி 5) நீளத் தாண்டல் 6)உயரம் தாண்டல், 7) தட்டெறிதல் 8) வேலெறிதல் 9 கோலூன்றித் தாண்டல் 10) இரும்புக் குண்டு எறிதல் ஆகும். இந்தப்போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சாதனைக்குரிய வெற்றி எண்களில், அதிக வெற்றி எண்களைப் பெறும் உடலாளரே வெற்றி பெற்றவராகிறார்.

13. எறியும் தட்டு (Discus)

வட்ட வடிவமாகவும். சுற்றிலும் உலோக விளிம்பால் உருவாக்கப்பட்டு, மரம் அல்லது அதற்கு இணையான பொருத்தமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கும் தட்டின் எடையும் அளவும் , ஆண் பெண், சிறுவர் என்பவர்களுக்கேற்ப வித்தியாசப்படுகிறது.

ஆண் எறியும் தட்டின் எடை 2 திலோ கிராம். பெண்கள். சிறுவர் சிறுமியர்க்குரிய தட்டின் எடை 1 கிலோ கிராம் தட்டின் சுற்றனவு 8.⅝"அங்குலம் ஆகும்.

பெண்கள் எறியும் தட்டின் சுற்றளவு 7.5/64அங்குலம் ஆகும்.

14.தட்டெறிதல் (Discus Throw)

தட்டெறியும் ஆட்டத்தின் அமைப்பு 2.50மீ+5 மி.மீ விட்டம் கொண்டதாகும். இந்த வட்டத்தின் உள் சுற்றளவு 8அடி 2.5 அங்குலம் ஆகும்.இதன் எறி கோணப்பரப்பு 40 டிகிரி அளவில் அமைக்கப்பட்டிருக்கும்.