பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108

ஒட்டத்தின் முதலிலே வருபவர். மற்றும் இரண்டாமவர், மூன்றாமவர் போன்ற வெற்றியாளர்களைக் கண்டு தேர்வு செய்வது இவர்கள் பணியாகும்

ஓடி வருகின்றவர்களின் தலையோ, கைகளோ, கால்களோ, நெஞ்சு பாகமோ அல்லது உடலின் ஏதாவது ஒரு பாக முடிவெல்லைக் கோட்டைக் கடந்திருக்கும் நிலையினைப் பார்த்தேதே அவர்கள் வெற்றியாளரைக் கண்டுப்பிடிப்பார்கள்.

31. நீதிக்குழு (Jury of Appeal)

போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருக்கும் உடலாளர்கள் மற்றும் மேலாளர்கள். இவர்களுக்கிடையே எழும் மாறுபட்டக் கருத்துக்கள். இக்குழுவிடம் விவாதத்திற்கு வரும். இக்குழுவில் உள்ளவர்கள் வருகின்ற அத்தனைக் கருத்துக்களையும் பொறுமையுடன் வரவேற்று. நிதானமாக ஆராய்ந்து உறுதியாக அதே நேரத்தில் இறுதி முடிவெடுக்கும்,அதிகாரம் கொண்டவர்களாக விளங்கின்றார்கள். சில முடிவகள் விதிகளுக்குட்பட்டவையாகவும். சில முடிவுகள் விதிகளுக்கடங்காமலும் ஏற்படுகின்ற சூழ்நிலைகளை உருவாக்கும். என்றாலும், தலைவர், செயலருடன் கூடிக் கலந்து, எல்லோரிடையும் ஓர் இனிய சூழ்நிலை ஏற்படுகின்ற அளவுக்கு நிதானமாக முடிவெடுக்கும் பணி நீதிக்குழுவுக்குண்டு.

32. ஓடும் பாதை (Lane)

100 மீ; 200 மீ; 400 மீ; தொடரோட்டம் மற்றும் தடை தாண்டி ஓடும் ஓட்டங்களுக்கரிய ஓடு பாதையின் மொத்த அகலம்ம் 7.33மீ ட்டர் அலலது 24 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் குறைந்தது 6 ஓடு பாதைகளாவது (Lane) அமைத்து, அதில் ஒவ்வொரு ஓடும் பாதையின்