பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பக்கக் கோட்டின் பக்கமாக முகம் திருப்பி அவர்கள் இரண்டு பெரும் எதிரெதிராக நிற்க, அவர்களுக்கு நடுவில் மையக் கோட்டின் மத்தியில் பந்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆட்டக் காரரும் பந்துக்கும் தன்னுடைய சொந்தக் கடைக் காட்டிற்கும் இடையில் தட்டிப் பின்னர் பந்துக்கு மேலே எதிரொளியின் 'கோல் முகத்தில் தட்டி (தட்டையான பகுதியில் தட்டுதல்) இது போல் மாறி மாறி மூன்று முறைத் தட்ட வேண்டும். பிறகு அந்த இருவரில் ஒருவர் அவருடைய கோலால் பந்தைத் தட்டி ஆடுவது தான் புல்லி எனப்படும். அதன் பிறகே பொதுவான ஆட்டம் தொடங்கும்.

(குறிப்பு) இப்போது இந்த புல்லி ஆட்டமுறை இடம் பெறுவதில்லை கால்பந்தாட்டம் பந்து உதையுடன் தொடங்கப்படுவது போல, பந்தைக் கோலால் ஒருவர் அடித்துத் தள்ள ஆட்டம் தொடங்குகிறது.

4 மைய முன்னோட்டக் காரர் (Centre Forward)

எதிர்க் குழு இலக்கினுள் பந்தை செலுத்தினால் தான் வெற்றி எண் பெற்று, வெற்றி பெற முடியும். அந்த பொறுப்பில் உள்ள 5 முன்னோட்டக்காரர்கள் நடு இடத்தை வகிப்பவர் தான் மைய முன்னோட்டக்காரர் ஆவார். அவர்தான் பந்தை சரியான வாய்ப்பு ஏற்படும்படி வழங்கி தன் பாங்கர்கள் இலக்கிற்குள் பந்தை அடித்திடும் நல்ல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவார். இவர் பொதுவாக அந்த குழுவில் உள்ள சிறந்த ஆட்டக்காரரில் ஒருவராக அமைந்திருப்பார்.

5 மையக்கோடு (Centre line)

பொதுவாக, வளைகோல் பந்தாட்டத்தின் ஆடுகள அளவு 100 கெஜம் நீளம் 60 கெஜ அகலம். இந்த ஆடுகளத்தின் நடுவில் ஒரு கோடு போடப்பட்டு, ஆடு களத்தை சம பகுதியாகப் பிரிக்கிறது. அந்தக் கோட்டினால்