பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

பிரிக்கப்படும் ஆடுகளத்தின் ஒரு பகுதி 50-60 கெஜ அளவுகளாக ஆக்கப்படுகிறது. ஆட்டம் தொடங்க, இதன் நடுவன் பகுதியிலிருந்து பந்து அடித்தாட ஆட்டம் தொடங்கும்.

6. எதிராளிமேல் மோதுதல் (Charging)

எதிராளி மேல் அநாவசியமாக மோதி ஆடுதல் தவறு என்று விதி முறைகள் விளக்கம் கூறி விளையாட்டைக் கட்டுப்படுத் துகின்றன. அடிக்கும் வட்டத்திற்கு வெளியே எங்கேனும் இதுபோல் மோதித்தள்ளும் தவறு நடந்தால் மோதலுக்கு ஆளான குழு 'தனி அடி' அடிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறது.

அடிக்கும் வட்டத்திற்குள்ளே மோதும் தவறுகள் நடந்தால், தாக்கும் குழு தவறு செய்கிற பொழுது, தடுக்கும் குழுவிற்குத் 'தனி அடி' அடிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். தடுக்கும் குழு தவறிழைத்தால் 'ஒறு நிலை முனை அடி' அல்லது ஒறு நிலைத்தள்ளல் (Penalty hit) என்ற தண்டனைகள் தவறிழைப்பின் தன்மையிலே நடுவரால் கொடுக்கப்படும்.

7. முனை (Corner)

பக்கக் கோடுகளும் கடைக் கோடுகளும் சந்திக்கின்ற இடம் தான் முனை என்று அழைக்கப்படுகிறது. தடுக்கும் குழுவினர் தவறிழைக்கிற பொழுது தாக்கும் குழுவினர் ஆட்டத்தினை மீண்டும் தொடங்க, முன் அடி அடிக்கின்ற வாய்ப்பை எதிர் குழுவினருக்கு நடுவர் வழங்க இந்த முறையில் பந்தை வைத்து அடித்தாட ஆட்டம் தொடங்கும்.

8. முனை அடி [Corner Hit]

எந்தக் கடைக் கோட்டின் பக்கம் பந்து கடந்து சென்றதோ, (தடுக்கும் குழுவினர் பந்து செல்லக் காரணமாக இருந்-