பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

களை 'கடைக் கோடுகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு கடைக் கோட்டின் நீளம் 55 முதல் 60 கெஜம் ஆகும். அதன் அகலம் 3 அங்குலம் ஆகும். ஒவ்வொறு கடைக் கோட்டின் மத்தியிலும் இலக்கு அமைக்கப்படுகிறது.

18. ஆடுகளம் (Ground)

வளைகோல் பந்தாட்ட ஆடுகளம் நீண்ட சதுர வடிவமைப்பு உடையதாகும். அதனுடைய நீளம் 100 கெஜமாகும். அகலம் 60 கெஜத்திற்கு அதிகமாகமலும், 50 கெஜத்திற்குக் குறையாமலும் இருக்கும். அகில உலகப் போட்டிகள் நடைபெறுகின்ற ஆடுகளத்தின் அளவு 100 x 60 கெஜம் ஆகும்.

19 இடைக் காப்பாளர்கள் (Half Backs)

இடைக்காப்பாளர்கள் என்பவர்கள் முன்வரிசை ஆட்டக்காரர்கள் போல் தாக்கி ஆடுவதிலும், கடைக்காப்பாளர்கள் போல, எதிரிகளின் இயக்கத்தைத் தடுத்து ஆடுவதிலும் வல்லமை பெற்றவர்கள். இவர்கள் எதிர்க்குழு இலக்கு வரை முன்புறமாக முன்னேறியும், தங்கள் இலக்கினைக் காப்பதற்காகத் தங்கள் இலக்கு வரை வந்தும் ஆடுகின்ற வாய்ப்பு உள்ளவர்கள். 3 பேர்கள் இந்த வாய்ப்புப் பெற்றவர்கள். அவர்கள் இடப்புற இடைக்காப்பாளர் மைய இடைக்காப்பாளர், வலப்புற இடைக்காப்பாளர் என்று ஆடும் இடத்திற் கேற்பப் பெயர் பெற்றுக் கொள்கின்றார்கள்.

20. இடைவேளை (Intermission)

வளை கோல் பந்தாட்டத்தின் மொத்த ஆட்ட நேரம் 70 நிமிடங்களாகும். அதில் ஆடும் பகுதி 35-85 எனப் பகுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளுக்கும்