பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

களத்தை நோக்கியபடி, பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இலக்குக் கம்பங்களிலும் குறுக்குக் கம்பத்திலும், இலக்குவின் பின்புறத்தில் உள்ள தரையிலும், 6 அங்குலத்திற்கு மிகாத இடைவெளியில், வலை ஒன்று இறுகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். 18 அங்குலத்திற்கு மேற்படாத அளவு கொண்ட இலக்குப் பலகைகள் (Goal Boards) இலக்கின் விலக்கு ஒரடி உட்புறமாக வைத்து அடைக்கப் பட்டிருக்க வேண்டும். அதாவது, இலக்கினுள் பந்து சென்றது என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகத் தான் இந்த இலக்குப் பலகை அமைப்பு இணைக்கப்பட்டிருக்கிறது.

16. இலக்குக் காவலன் (Goal Keeper)

ஒவ்வொரு குழுவிற்கும் ஒர் இலக்கு உண்டு. அந்த இலக்கின் உள்ளே பந்தை அடித்து, எதிராளிகள் வெற்றி பெற முடியாதபடி தடுத்துக் காக்கின்ற ஒரு பெரும் பொறுப்பைத் தந்து அதற்காக ஒருவரை நிறுத்தி வைக்கின்றார்கள். அவர் தான் இலக்குக் காவலர். அந்த இலக்கைக் காப்பதற்கென்று அவருக்கு சில சலுகைகள் உண்டு. காலிலே கனமான காலணிகள், முழங்கால்களுக்குக் கீழே தடை மெத்தைகள்; காலுறை மெத்தைகளுக்கு மேலும் கனமான அமைப்புகள், கையுறைகள், பந்தைக் காலால் உதைக்கலாம் என்ற சிறப்பு அனுமதி, அதற்கும் மேலாக ஒரு கொல். இவர் பந்தைத்தான் உதைக்கலாம். மற்றவர்களை அல்ல.

இலக்குக் காவலர் முழு நேரமும் இலக்கைக் காப்பதில் தான் கண்ணுங் கருத்துமாக இருக்கிறார் பொதுவாக ஆட்டத்தில் பங்கு பெறுவதில்லை.

17. கடைக்கோடு (Goal Line)

ஆடுகள எல்லையைக் காட்டும், நீண்ட எல்லைக் கோடுகளைப் பக்கக் கோடுகள் என்றும், குறுகிய எல்லைக் கோடு-