பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பின்னர், விளையாட்டுத் துறையில் பணியாற்று பவர்களான ஆசிரியர்கள், மாணவர்களது உடலையும் உள்ளத்தையும் பண்படுத்தி வளர்க்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதை உணர்ந்து, உடற்கல்வி ஆசிரியர் (Physical Education Teacher) என்று பெயர் மாற்றி அழைத்தனர் விஞ்ஞானபூர்வமான கல்வியாக, உடலுக்குக் கல்வியாக விளங்குகிறது என்பதால்தான், உடற்கல்வி என்றும் பெருமையுடன் அழைக்கப்பட்டு வந்தது. இன்றும் வருகிறது.

ஆரம்ப நாட்களில், உடற்கல்விக் கல்லூரிகள் அதிகமில்லாத காலத்தில், உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களாக, இராணுவத்தில் உடற்பயிற்சி பயிற்றுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை (Ex-Servicemen) அமர்த்தினார்கள். அவர்கள் உடற் பயிற்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து, பள்ளிகளில் பணியாற்றி வந்தார்கள். அதனால் அவர்களை டிரில் மாஸ்டர் என்றே எல்லோரும் அழைத்தனர்.

அப்படியானால் உடற்பயிற்சிக்கு Drill என்ற வார்த்தை எப்படி வந்தது என்று ஆராய்வோமானால் உண்மை விளங்கும்.

அதற்காக அதன் பழங்கால வரலாற்றை அறிய, நாம் பின்நோக்கிப் போக வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இன்றைய வழக்கில் உள்ள Drill என்ற சொல்லுக்கு தமிழகராதியின்படி, துளைசெய் (Bore), துளையிடும் கருவி, பயிற்சி அளி என்று பல மாதிரியாகப் பொருள்