பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

12


கூறுகின்ற வார்த்தைகள் பல உண்டு. ஆனால், இந்த டிரில் என்ற வார்த்தையானது டச்சு மொழியிலிருந்து உருவாகிய சொல்லாகும்.

Dutch Drillen என்ற டச்சு சொல்லுக்கும் துளையிடு, ஊடுருவிச் செல் (Pierce) என்பது பொருளாகும். இது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்றால், மரத்தைத் துளையிடுவதற்காக, அதாவது சுற்றிச் சுற்றி, ஒன்றினையே குறிவைத்து, ஊடுருவிச் செயல்படுகின்ற காரியத்தைச் செய்வது என்பதற்காகத்தான்.

இராணுவத்தில் பணியாற்றுகின்ற படைவீரர்கள், பல முறைகளில் உடற்பயிற்சிகளைத் திரும்பத் திரும்பச் செய்து, மரத்தைத் துளையிடுவதுபோல, உடலை பயிற்சியால் துளைத்து அவர்களை பலம் நிறைந்தவர்களாக மாற்றிட, இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய முறையையே Drill என்று வழங்கினர்.

அந்த முறையே உடற் பயிற் சித் துறைக்கும் வந்ததால்தான், உடற்பயிற்சியை Drill என்றும், உடற்பயிற்சி தருபவரை டிரில் மாஸ்டர் என்றும் அழைத்தனர்.

4. EXERCISE

உடற்பயிற்சி என்ற பொருளில் வழங்கும் எக்சர்சைஸ் எனும் சொல், இலத்தீன் மொழிச் சொல்லாகும்.

இதை எக்சார்சைஸ் (EXCORCISE) என்றும் வழங்கியது உண்டு.