பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


விளையாட்டில் கையில் வைத்திருந்த நீண்ட குச்சியில் கீறி கணக்கு எடுத்துக் கொண்டிருந்த அதே முறையைப் பின் பற்றி, அமெரிக்க வரலாற்றிலும், அவர்கள் வைத் திருந்த துப்பாக்கிகளின் மீதும் அடையாளம் செய்து கணக்கெழுதி இருக்கின்றனர்.

ஒவ்வொரு பொருளின் மீதும் பள்ளம் தோண்டியோ, அல்லது சிறு பிளவு தெரிவதுபோல வெட்டியோ அல்லது மற்ற அமைப்பில் எழுதியோ வைத்துக்கொள்வது அக்கால வழக்கில் இருந்து வந்ததே, ஆர்வத்துடன் ஆடிய விளையாட்டிலும் விரவி வந்திருக்கிறது.

குச்சியில் குறித்த தன்மையானது இன்று காகிதத்தில் ஆட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் கணக்காக மாறி வந்திருக்கிறது. Score என்றால் பொதுவாக இருபது கோடு, கணக்கு நிமித்தம் என்று பல பொருட்கள் பழக்கத்தில் இருந்தாலும், விளையாட்டில் வெற்றிக் கணக்கைக் குறிக்கும் பொருள் ஒன்றையே காட்டும் சொல்லாகவே இன்று மாறியிருப்பது, இந்த சொல்லின் முக்கிய அம்சமாகும்.



12. SPORT


விளையாட்டு என்று பொதுவாக வழங்கப்படும் பொருளில் அமைந்துள்ள Sport என்னும் ஆங்கிலச் சொல்லானது, ஆரம்ப காலத்தில் உருவான அடிப்படைக் காரணமே வேறுவிதமாகத் தான் இருக்கிறது.