பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தொடங்கிய வரலாற்றைப் படைக்கும் சொல்லாகவே Tropain என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

பின்னர்தான், மரத்தட்டில் வெள்ளித் தகடுகளைப் பதிக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதனால் தான் அது. ஆங்கிலத்தில் Trophy என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது.

Trophy என்றால் கேடயம் மட்டுமல்ல, கோப்பையாகவும் (Cup) வடிவம் பெற்றுக் கொண்டு இன்று விளங்குகிறது.

26. VOLLEY

Volley என்று சொன்னவுடனேயே நமது நினைவுக்கு வருவது Volley ball என்கிற கைப்பந்தாட்டம் தான். அந்த அளவுக்கு, அது மக்களிடையே மகிமை பெற்ற ஆட்டமாக விளங்கி வருகிறது.

இந்த இனிமை மிக்க விளையாட்டைக் கண்டு பிடித்தவர் வில்லியம் மோர்கன் எனும் அமெரிக்கர் ஆவார். அவர் மின்டன் என்ற ஓர் ஆட்டத்தைப் பார்த்த பிறகு ஏற்பட்ட கற்பனை எழுச்சியின் காரணமாக, இப்படி ஒரு ஆட்டத்தை உருவாக்கினார்.

அதற்கொரு பெயர் சூட்ட முனைந்த பொழுது, மின்டன் என்ற ஆட்டத்தின் பெயரையும் நினைவுகூற வேண்டும் எனும் நன்றி உணர்வுடனோ என்னவோ, அந்தப் பெயரையும் இணைந்தவாறு ஒரு பெயரைச் சூட்டினார். அதற்கு மின்டானெட் என்று திருப்பெயராக மலர்ந்தது.