பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

82


மைதானத்தை விட்டு வெளியே நிற்கின்ற ஒரு குழுவானது, குறிப்பிட்ட நேரத்திற்குள் விளையாட வராவிட்டால், அந்தக் குழுஆடும் உரிமையை இழந்து போகிறது, வெற்றியையும் இழக்கிறது என்று குறிக்கும் பொருளையே இந்த போர்பிட் எனும் சொல் குறிக்கிறது.'

வாழ்க்கையும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து இணைந்தே செல்கின்றன என்பதற்கு இந்த சொல் ஒர் இனிய எடுத்துக்காட்டாகும்.

நல்லது செய்தால் ஏற்றுக் கொண்டு போற்றும் பண்பை வளர்ப்பதும், அல்லது செய்தால் அதனை மாற்றி நேர்வழி செல்லத் தூண்டுவதும்தான் நாட்டுச் சட்டத்தின் இயல்பாகும். அந்த சட்டம் போலவே, விளையாட்டுத் துறையின் சிறப்பான விதிகளையும், பொறுப்பான போற்றிக் காக்கும் மரபுகளையும் வழிகளையும், ஏற்படுத்திக் கொண்டு போகிறதல்லவா!

அதனால்தான், வாழ்க்கையின் வழிகாட்டியாக விளையாட்டு விளங்குகிறது. நல்ல வாழ்க்கையை நல்ல பண்புள்ள விளையாட்டு வீரன் எப்பொழுதும் வாழ முடியும் என்றெல்லாம் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

ஆணைக்கு அடங்கி நடப்பது அறிவுடையோர்க்கு அழகு, அந்த அழகினையும் அறிவினையும் தரவல்ல வளையாட்டுத் துறையில் Forfeit என்ற சொல் இருந்து, புறம்பான செயல் புரிவோரைப் புறம் தள்ளிப் போக்குகின்ற பெரும் பணியை மகிழும் வண்ணம் வழி நடத்தி வைக்கிறது.