பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


34. ΑΜΑΤΕUR

விளையாட்டுத் துறையில் மிக அதிகமான விவாதங்களுக்கும் வேண்டாத விளைவுகளுக்கும் வித்திட்ட சொல்தான் இந்த அமெச்சூர் என்ற சொல்லாகும்.

விளையாட்டு வீரர்களை இரண்டு வகையாகப் பிரித்திருந்தார்கள் விளையாட்டுத் துறையாளர்கள். ஒரு பிரிவு: விளையாட்டை விளையாட்டுக்காகவே விளையாடி மகிழ்ச்சி பெறுபவர். இரண்டாம் பிரிவு: விளையாட்டில் உள்ள தனது திறமையை பணம் சம்பாதிப்பதற்காகப் பயன்படுத்தும் பிரிவினர்.

இவர்களில் முதல் பிரிவினரை Amateur என்றும், இரண்டாவது வகையினரை Professional என்றும் கூறி வந்தனர்.

ஆனால், இந்தக் காலத்தில் அதிகமாகக் குழப்பத்தில் ஆழ்த்தும் சொல்லாகவே இந்த அமெச்சூர் என்ற வார்த்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்த வார்த்தை பற்றி தெளிவு கொள்வதற்கு முன்னர், எந்தப் பொருளில் இந்த சொல் தோன்றியிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

Amateur என்ற சொல்லுக்கு அடித்தளமாக அமைந்த ஒர் இலத்தீன் சொல் Amato என்பதாகும். இந்த இலத்தின் சொல்லுக்கு அன்பர் (Lower) என்பது பொருளாகும்.

அதாவது, தான் விரும்பி எற்றுக் கொண்டு வந்து விளையாடும் குறிப்பிட்ட நிகழ்ச்சியை, விருப்பத்திற்