பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

86


பெற வேண்டும் என்ற மரபும் இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக, முதல் உலக மகாயுத்தம் 1916ம் ஆண்டு நடைபெற்றதால் நின்றுபோன ஒலிம்பிக் பந்தயம், அடுத்த நான்காவது ஆண்டில்தான் (1920ல்) நடத்தப் பெற்றது.

இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்தபோது 1940, 1944ம் ஆண்டுகளில் நடைபெற வேண்டிய இரண்டு பந்தயங்களும் நடைபெறாமல் நின்றுபோயின.

என்றாலும், அதைத் தொடர்ந்து, 1948ம் ஆண்டுதான் மீண்டும் நடத்தப் பெற்றதை அறியும்போது, இந்த மரபின் நிலையை நம்மால் தெரிந்துகொள்ளமுடிகிறது.

ஆகவே, ஒலிம்பியாட் என்ற கிரேக்கச் சொல்லானது ஒலிம்பிக் பந்தயம் நடைபெறுகின்ற கால அளவினைச் சுட்டி காட்ட வந்த சொல்லாகும்.

ஒவ்வொரு நான்காம் ஆண்டின் இறுதியிலும் இந்தப் போட்டிகள் நடைபெற்றன என்பதையும் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

ஒலிம்பியா, ஒலிம்பியாட், ஒலிம்பிக் பந்தயங்கள் என்ற சொற்கள் மிகுதியான அளவிலே பேசப்பட்டு வந்ததால் மட்டுமல்லாது, புனிதமும் வீரமும், பெருமையும் நிறைந்திருந்ததாலும் அதிகப் புகழ்பெற்று விளங்கின.