பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி ஒருவனாகமேற்கொண்டமுயற்சி இது. எனது ஆர்வத்தின் பேரெழுச்சியின் காரணமாகப் படைக்கப்பட்ட நூல் என்றால் அது மிகையல்ல.


அகராதி என்று ஒன்று எழுத வேண்டுமென்றால், அதற்கு ஆழமான அறிவு, ஆழ்ந்த அனுபவம், ஆன்ற சொல்வளம், அமைப்பினை வடிக்கும் கருத்தாழம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.


இருந்தாலும், நான் எனது தகுதியை நினைக்காமல், எனது “தைரியம் ஒன்றையே முன்னணியாக வைத்துத் தொடங்கி, இன்று


ஓரளவு நிறைவேற்றியும் இருக்கிறேன்.


விளையாட்டுத்துறையில் நூற்றுக்கு மேற்பட்டதமிழ் நூல்களை


எழுதித் தயாரித்து, அச்சிட்டு வெளியிட்ட அந்தத் தைரியம்தான் இது. தனிப்பட்ட ஒரு விளையாட்டு ரசிகனின் உழைப்பு இது.


நீண்டகாலமாக மகப்பேறு இல்லாத ஒரு குடும்பத்தில், தப்பிப் பிறந்த குழந்தை போல இந்நூல் வந்திருக்கிறது.


அழகு பார்க்காமல், அங்க லட்சணம் குறிக்காமல், ஆருடம் கணிக்காமல், அது இது என்று ஆர்ப்பாட்டம் செய்யாமல், திருப்தியுடனும் தீராத மகிழ்ச்சியுடனும் தன்னுடைய குழந்தையைக் கொஞ்சும் தாயைப் போல, முதல் முறையாக வந்திருக்கும் இந்நூலையும் திருப்தியான மனதுடன் பார்க்க வேண்டுகிறேன்.


குழந்தை இல்லாத வீட்டில் பிறந்த குழந்தையின் ‘2ertLD மழலை என்று கூட நீங்கள் கருதலாம்.


ஆயிரமாயிரம் விளையாட்டுக் கலைச் சொற்களை, அதிக சிரமத்துடன் திரட்டி, ஒன்று சேர்த்து, அதற்காக அருந்தமிழ்க் கலைச் சொற்களையும் மிகவும் முயன்று உருவாக்கிக் கொடுத்துள்ளேன்.


பண்பாளர்களாகிய உங்கள் கரங்களில் இன்று தவழுமாறு தந்துள்ளேன். இன்றைய தமிழ் மறுமலர்ச்சி காலத்தில், விளையாட்டுத துறையின் மேம்பாட்டுக்கு இந்த நூல் உதவும் என்ற நம்பிக்கையில்


உங்கள் முன் படைத்துள்ளேன்.