பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 ||

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

சம் சாரத்தை பின்னால் ஏற்றி வைத்துக் கொண்டு ஜாலியாகப் போவதற்காக வாங்கவில்லை. என் இலட்சியம் பற்றி, உங்களுக்குப் புரிய நியாய மில்லை. பிரஸ் ஸுக்குப் போவது , பேப்பர் வாங்குவது, புரூப் திருத்துவது, பல இடங்களுக்கு சீக்கிர மாகப் போய் வருவது - என் இலட்சியத்திற்கு உதவத் தான் வாகனம் வேண்டுமென்று விரும்பினேனே தவிர, குடும்பத்தின் குதுகலத்திற்காக அல்ல என்றேன்.

என் கைகளைப் பிடித்துக் கொண்டு தவறாக நினைக்காதீர்கள். என் மகன் பேசியதற்கும் நீங்கள் பேசுவதற்கும் இடையிலே ஏதாவது வித்தியாசம் வருகிறதா என்று பார்த்தேன். உண்மையிலே, உங்களுக்கு உதவுவதில், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று ஆதரவாகப் பேசினார். உதவியும் செய்தார்.

விக்கி என்றொரு மாடல் வண்டியை வாங் கினேன். தற்போது டிவிஎஸ் சேம்ப் போல, மொப்பெட்மாடல். என் உயரத்திற்கும் உடல் பருமனுக்கும் அந்த வண்டி ஏற்றதாக இல்லைதான். சர்க்கஸில் கரடி சைக்கிள் ஒட்டுவதுபோல, நான் வண்டியில் வருகிறேன் என்று, என் மாணவர்கள் கேலி செய்து சிரிப்பார்கள். -

என்ன செய்வது? இதாவது கிடைத்ததே என்று அதை ஒட்டிக்கொண்டு பல பள்ளிகளுக்கு என் படையெடுப்பைத் தொடர்ந்தேன்.

உடற் கல்வி ஆசிரியர்களுக்கும் என்னை யாரென்று தெரியாது. தலைமை ஆசிரியர்களுக்கோ, என்னைப் பற்றி தெரிய நியாயமே இல்லை.

ஆகவே, ஒரு பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரைப் பார்க்க, ஒரு மணி நேரமாவது தலைமை ஆசிரியரின்