பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

நீங்கள் நல்ல காரியம் செய் திருக்கின்றீர்கள். நமது துறைக்கு இப்படி பல புத்தகங்கள் கட்டாயம் வேண்டியதுதான் என்று, எழுந்து வந்து கை குலுக்கினார்.

ஒரு செட் புத்தகம் என்ன, 5 செட் புத்தகங்கள் எங்களுக்குத் தாருங்கள் என்று ஆர்டர் செய்தார்.

அவருடைய பெருமைக் குத் தீனி போட்டு விட் டு, என்னுடைய லட்சியத்திற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துக் கொண்டேன். இந்த வழிதான், என்னுடைய புத்தகங்களை சிரமப்பட்டாலும், கொஞ்சம் வேகமாக விற்பனை செய்ய உதவியது. அந்த வழி என்ன என்று நினைக்கின்றீர்கள்?

நான் எழுதி வெளியிடுகிற புத்தகங்கள் பற்றி, யார் என்ன விமர்சனம் செய்தாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மனதை வருத்திக் கொள்ளக்கூடாது. எதிர்மாறாக பேசுகிறவர்களுக்கும் பெருமை தந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதாக முடிவு செய்துகொண்டேன்.

இதை எப்படி நிறைவேற்றினேன் என்று உங்களுக்கு இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

ஒருமுறை, நான் விழுப்புரம் வரைபோக நேர்ந்தது. ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து பவல் ஒன்றில் புறப்பட்டேன். செங்கல்பட்டு வந்ததும், இரண்டு பேர்பஸ்ஸில் ஏறி, என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள் மூன்று பேர்கள் அமரும் இருக்கை அது.

அவர்கள் இருவரும் நண்பர்கள், பல விஷயங்கள் பற்றிப் பேசினார்கள். சர்ச்சையில் இறங்கினார்கள். இடையிடையே சில கெட்ட வார்த்தைகளையும் போட்டு பேசிக்கொண்டே வந்தபோது, விளையாட்டு பற்றிய பேச்சு வந்தது.

அடுத்து விளையாட்டு பற்றிய புஸ்தகங்கள் பற்றிய பேச்சு