பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 168

வந்தது. அதில் என் பெயரும் இடம் பெற்றுக் கொண்டது. ஒருவர் என் புத்தகத்தைப் பற்றி, பெருமையாகப் பேசினார். மற்றவர், என்னடா அவன் கிழித்துவிட்டான் என்று ஏக வசனத்தில் என்னை, விமர்சிக்க ஆரம்பித்தார்.

சிறிது நேரம் சங்கடத்தால் நெளிந்த நான், சுதாரித்துக் கொண்டேன். என்னைத் திட்டிப் பேசியவர் கட்சியில் சேர்ந்து கொண்டேன். நாங்கள் இருவரும் நவராஜ செல்லையாவைப் பற்றிப் பேசப் பேச, எதிர்த்த நண்பர் என் எழுத்துக்களை மிக அழகாக எடுத்துக் கூறி சமாளித்தார்.

மூவரும் விளையாட் டு இலக்கியம் பற்றிப் பேசிக் கொண்டே, அவரும் ஏசிக் கொண்டே வர வர, விழுப்புரம் வந்து சேர்ந்தோம். நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதே.

என்னை ஏசிக் கொண்டே வந்த அந்த நபரைப் பார்த்து, எழுத்தாளர் நவராஜ செல் லை யாவைப் பற்றி இவ் வளவு அழகாக, தெளிவாக, ஏக வசனத்தில், கொஞ்சம் மரியாதை கலந்த தமிழில் பே சினiர்களே! அவரை நீங்கள் நேரில் பார்த்திருக்கின்றீர்களா என்றேன்.

இல்லை என்பதாகத் தலையசைத்தார்.

நீங்கள் நிர்தாட்சண்யமாக விமர்சித்த ஆள், நான்தான். நான்தான் நவராஜ் செல்லையா என்று அவரிடம் கூறிவிட்டு, இறங்கி புறப்பட்டேன். இரண்டு நண்பர்களும் என்னைப் பார்த்த அந்த பார்வை இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

என்னைத் திட்டினாலும், பாராட்டிப் பேசினாலும் இயல்பாக எடுத்துக் கொள்கிற இந்த மனப் பக்குவம்தான், என்னை திறமையான ஒரு வியாபாரியாக மாற்றி வைத்தது.