பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 69

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் பொறுமை காட்டிப் பேசினேன் பாருங்கள்! அந்தப் பொறுமை தான் என் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

காஞ்சிபுரத்திலே மாநிலப் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு நான் பார்வையாளராகப் போயிருந்த போதுதான், இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. (1976)

மத்தியானம் சாப்பிடுவதற்காக ஒட்டலை நோக்கி நான் தனியே சென்றுகொண்டிருந்தபோது, என் எதிரே, பதினைந்து இருபது பேர்களுடன், ஒருவர் வந்துகொண்டிருந்தார் அவர் அந்த குழுவிற்கு ஒரு பயிற்சியாளர் என்பதை பார்த்தவுடன் நான் தெரிந்துகொண்டேன்.

என்னைப் பார்த்ததும், அவர் எனக்கு வணக்கம் தெரிவித்தார். நானும் வணக்கம் செய்தேன். தன்னுடன் வந்தவர்களிடம் என் பெயரைச் சொல்லி, அறிமுகம் செய்து வைத்தார். நானும் பதில் வணக்கம் செய்துவிட் டு பிறகு பார்க்கிறேன் என்று அவரிடம் கூறியபடி புறப்பட்டேன்.

ஒரு நிமிடம் என்றார். திரும்பிப் பார்த்தேன்.

கூடைப் பந்தாட்டம் பற்றி, நீங்கள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா என்றார்.

ஆமாம் என்றேன்.

அந்தப் புத்தகத்தை நானும் படித்துப் பார்த்தேன். அதில் நிறைய தவறுகள் இருக்கின்றன. கொஞ்சம் கவனமாகப் பார்த்து எழுதுங்கள் என்றார்.

நான் அவரை ஏறிட்டு நோக்கினேன். அவர், இவ்வாறு

பேசியபடி தன்னுடன் கூட வந்தவர்களை யெல்லாம் ஒருமுறை பெருமையாகப் பார்த்து புன்னகை செய்தார்.