பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

திரு. நவராஜ் செல்லையாவும் வந்திருக்கிறார். அவருக்கும் ஒரு ரூம் போட்டுக் கொடுங்கள் என்று, பக்கத்தில் இருந்த ஒரு ஆசிரியரைப் பார்த்து கார்மேகம் கூறினார்.

அவர் கூறிய பதில். எல்லோரையும் ஆச்சரியத்தில் மட்டுமல்ல, அதிர்ச்சியையும் அளித்தது.

சார், அவர் புத்தகம் விற்க வந்திருக்கார் நாம ஏன் ரூம் போட்டுத் தரனும். அது நம்மளோட பொறுப்பில்லே என்று அவர் பேசியது, எனக்கு அவமானமாகப் போய் விட்டது.

அப்படி பேசியவர் வேறு யாருமில்லை. எனக்கு பல கடிதங்கள் எழுதி வருந்தி வருந்தி அழைப்பு விடுத்தவர்தான்.

‘'சார், நான் புத்தகம் விற்க வந்த புத்தக வியாபாரிதான். ஆனா, நீங்க போட்ட கடிதத்துக்கு மதிப்பு கொடுத்துதான் இங்கே வந்தேன். இப்ப, உங்ககிட்ட எந்த தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஊருக்கு புதுசு. ராத்திரி நேரம். லாட்ஜ் எந்தப் பக்கம் இருக்குன்னு சொன்னா போதும். நான் போய் தங்கிக்கிறேன். ‘

நான் யாரோட தயவையும் எதிர்பார்த்து வரலே, என்று நான் கோபமாகப் பேசியதைக் கேட்ட கார்மேகம், என்னை சாமாதானப்படுத்தத் தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்துவிட்டது. புத்தக ஆசிரியர் என்ற மரியாதை வேண்டாம். இந்தத் துறையில் உள்ளவன் என்பதற்காகவாவது. என்னை ஒரு மனிதனாக அவர் மதித்திருக்கலாம்.

அப்போதே ஒரு முடிவுக்கு வந்தேன். ‘எந்தத் துறையில் புத்தகம் எழுதியதால் , என்னை கேவலமாக நினைத்தார்களோ, அந்தத் துறையிலேயே நிறைய புத்தகங்களை எழுதி, மற்றவர்கள் மதிக்கின்ற அளவுக்கு