பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

டாக்டர் எளில் நவராஜ செல்லையா

16. நல்ல கதைகள் (சிறுவர்களுக்கான கதைத் தொகுப்பு)

17. நல்ல நாடகங்கள்

18. கைப்பந்தாட்டம்

1975 ம் ஆண்டு முன்னதாக, மேற் காணும் நூல் களை

யெல்லாம், எழுதி, பதிப் பித்து, விற் பதற்கு ஊர் ஊராக

அலைந்து வந்தேன்.

எழுதுவதற்குத்தான் குறிப்பிட்ட ஒரு இடம் இல்லாமல் இருந்ததுபோலவே, குடியிருக்கவும் ஒரு சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தேன்.

எழுதுவதற்கு ஒர் இடம் இல்லை என்று ஏன் குறிப்பிட்டேன் என்றால், நான் எழுத்தைக் கைப் பிடித்து, என்னுள்ளே மணம் புரிந்து கொண்ட பிறகு, ஏழை எழுத்தாளனுக்கு ஒய்வாக இருக்க, அமைதியாக சிந்திக்க இடம் கிடைக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

வீட்டில் இருந்தாலும் சத்தம் பேச்சு, ரேடியோ அலறல், வெளியில் வந்தாலும் இதே கூச்சல் கும்மாள நிலைதானே. இந்த

சத்தமான சூழ் நிலையில், என் மனதை அமைதிப் படுத் திடவேண்டும் என்று, நான் எழுத ஆரம்பித்த நாளிலிருந் தே, மனதைக் கட்டுக் குள் கொண்டு வர,

பழகிக்கொள்ளத் தொடங்கினேன்.

வித்யா மந்திர் பள்ளியில் நான் பணியாற்றியபோது, இந்த சோதனை முறையை பழக்கம் செய்து கொண்டேன். எப்படி தெரியுமா?

வித்யா மந்திரில் பணியாற்றியபோது, 1 முதல் 5 வரையில் படிக்கும் குழந்தைகளுக்கான ஒரு கட்டிடம் , உயர் வகுப்புகளுக்கு ஒரிடம் என்பதாக இருந்தது. மத்தியானம் உணவு நேரம் என்றால், ஒரே கூச்சலும் கும் மாளமும்