பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

உத்யோகத்தையும் உதறித் தள்ளிவிட்டு, முழுநேர எழுத்தாளனாக, மும் முரமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலக்கட்டம் அது.

எனது புத்தகங்களையெல்லாம், பத்திரிக்கைகள், மிக அழகாகவும் தெளிவாகவும் விமர்சனம் செய்து வந்தன. அதனால், எனது புத்தகங்களை வாங்க, வாசக அன்பர்கள், ரெங்கநாதன் தெருவரை வந்துவிடுவார்கள், வீடு எங்கே என்று தேடப் போய் , மணிக் கணக்காக அலைந்து கண்டுபிடித்தவர்களும் உண்டு.

திக்குத் தெரியாக காட்டில், தேடித்தேடி இளைத்தேனே என்று பாடியதுபோல, வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல், கனத்த மனதுடன் சென்றவர்கள் நிறைய பேர்கள்!

இதனால் எனக்கு ஒரு யோசனை வந்தது ராஜ மோகன் பதிப்பகம் என்று 2 அடி நீளம் 6 அங்குல அகலத்தில், ஒரு அட்டையில் எழுதி, என் வீட்டின் முன்னே உள்ள கடைக்கு முன்புறமாக நின்றிருந்த, கவர் மென்ட் தந்திக் கம்பத்தில் கட்டிவிட்டிருந்தேன்.

இரவில் கட்டிவிட்டு, இனி கவலையில்லை என்று எண்ணிக்கொண்டு, உறங்கப்போய், காலையில் கண்விழித்து, அந்த அட்டையைப் பார்க்க வந்தால், அட்டை தந்திக் கம்பத்தில் இல்லை. செருப்புக் கடைப் பபையன் ஒருவன் கையில் இருந்தது.

அவர்கள் அதிகாலை யிலேயே கடையைத் திறந்துவிடுவார்கள், வந்ததும், அந்த விளம்பர அட்டையைப் பார்த்ததும், வயிற்றெரிச்சல். கண்ணை மறைக்கும் கோபம். அறுத்து விட்டார்கள். -

நான் போய் காரணம் கேடடேன், எங்கள் கடை முன்னே இது இருக்கக் கூடாது. நீங்கள் போர்டு போட