பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 - - - - - - - டாக்டர் எளில் நவராஜ் செல்லையார்

முடியாது என்பது தான். -

இந்த இந்தியச்சமுதாயம், படிப்பைவிட, பணத்துக்குதான் அதிகம் மதிப்பளிக்கிறது. மரியாதை கொடுக்கிறது. படித்தவன், அறிவுள்ள ஏழை யாகத் தான் வாழ முடிகிறது. இந்த சமுதாயத்தில் இதுதான் நடைமுறை என்பதை நான் அறிந்துதான் வைத்திருந்தேன்.

2000 ரூபாய் மாத சம்பளம் வாங்கும் ஒரு அலுவலரிடம் போய், ஒரு பட்ஜெட் போடு என்றால், அவர் தனக்குள்ளே இருக்கின்ற ஆசைகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, 1999 ரூபாய்க்குத்தான் போடுவார். மீதி 1 ரூபாயாவது கைவசம் இருக்கட்டும் என்பதற்காக.

அவரது எண்ணமெல்லாம் ஒரு இன் கிரிமெண்ட், அலவன்ஸ் எப்போது வரும் என்பதில் தான். அதற்கும் மேலே சிந்திக்க, வருவாயை சந்திக்க வாய்ப்பே இல்லை. வருமானமும் வருகிற சூழ்நிலையும் இல்லை.

அதே சமயத்தில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிக்கிற ஒரு வியாபாரியிடம் பட்ஜெட் போடு என்றால், அவன் விருப்பப்படி லட்சக்கணக்காகப் போடும் நிலைமை உண்டு. இன்றில்லை, நாளைக் காவது நம்மால் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான், படித்து, அதன் பயனாகக் கிடைத்த ஆபீஸ் வேலைகளை விட்டு விட்டு, வியாபாரத்தை மேற் கொள்ள முடிவு செய்தேன். வாழவும் முயன்றேன்.

வியாபாரத்திற்குப் போகாதே! நஷடம் வரும். கஷடம் வரும் அதிலிருந்து மீள்வது என்பது ஆபத்தைப் போன்றது என்று என்னை தடுத்தவர்களும் உண்டு.