பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

இலக்கியப் பணி, தொய்வட்ையாமல் தொடரும். அதற்காக, என்னை உடலால் தயார் செய்து கொள்கிறேன். மனதால், நிறைவு கொள்கிறேன். பெருளைத் தேடி பதிப்பகப் பணியை விடாமல் போற்றித் தொடர்கிறேன்.

செக்ஸ், சினிமா, அரசியல் இருந்தால்தான் பத்திரிக்கைகள் விற்பனையாகும். விடாமல் வெளியாகும் என்ற கருத்துள்ள இந்தியத் திருநாட்டில், தாய்த் தமிழ் மண்ணில், இந்த மூன்றுமே இல்லாமல், உடல், மனம் , ஒழுக்கம், பயிற் சி, பண்பாடு போன்ற கருத்துக்களை எழுதி 1977ல் தொடங்கி, இன்று வரை வெற்றிகரமாக விளையாட் டுக் களஞ் சியம் என்ற மாத இதழைத் தொடங்கி தொடர்ந்து இலக்கியப் பணியாற்றி வருகிறேன். A.

தமிழுக்கு இது முதல் விளையாட்டுத் துறை மாத இதழ் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன்.

விளையாட்டுக் களஞ்சியம் , விளையாட்டு பத்திரிக்கை இது என்று அனைவிர்ாலும் பாராட்டப்படுகின்ற இலக்கிய இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. -

எத்தனை எழுதினாலும், எவ்வளவு செய்தாலும், எதுவும் செய்யவில்லை என்ற எண்ணம்தான் என்னுள் மேலோங்கி

இருக்கின்றது.

கடினமான உழைப்பு என்றாலும் , கொஞ்சம் கூட காலத்தை வீணாக்காமல், உடல் களைத்துப் போகும் அளவுக்கு எழுதுகிறேன். சோர்ந்து போகிற உட்லும், சரிந்து போகிற மனமும், தீர்ந்து போகிற கருத்துக்களும் தூங்கி விழித்தவுடன், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்கின்றன.

புதுத் தெம்பு புறப்பட்டு விடுகிறது. இதமான மனம் இலட்சியத் தைக் காட்டுகிறது. என்னைத் துண்டி மேலும் இரட்டிப்பாக வேலை வாங்கிக் கொள்கிறது. வற்றாத ஊற்றாக