பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

நூலகத்திற்குப் போகமல், விளையாட்டுத் துறையில் அனுபவம் உள்ளவர்களை உடற்கல்வித் துறை இயக்குநர்கள் பலரை அணுகி, என் ஆர்வத்தைக் கூறினேன்.

வேறு வேலை உனக்கு எதுவும் இல்லையா? விவரமில்லாமல் உன் வாழ்நாளை வீணாக்கிக் கொள்ளப் போகிறாயா? தமிழில் புத்தகங்கள் தாம் எழுத முடியுமா? அதற்காக தமிழ் வார்த்தைகள் ஏதாவது இருக்கிறதா? ஆங்கிலச் சொற்களைத்தானே அத்தனை பேரும் பேசுகின்றார்கள்? அப்படியிருக்க தமிழில் நூல்கள் எழுதினால் எப்படி புத்தகம் விற்கும்? யார் தான் வாங்குவார்கள்.

இப்படித்தான் என்னிடம் எல்லோரும் பேசினார்கள். அதாவது அடித்துப் பேசினார்கள். நான் நினைத்துப் பார்க்ககூட கூசும் படி என் ஆசைகள் அத்தனையும் தவிடு பொடியாகும்படி யோசனை கூறினார்கள்.

‘ஏண்டா கேட்டோம் என்கிற நிலைக்கு நான் துவண்டு போய் விடுவேன்.

இனிமேல் யாரிடமும் போய் யோசனை கேட்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அந்த நிலைக்கு என்னை ஆளாக்கியவர் என் துறைத் தலைவர் டாட் தான்.

ஒரு நாள் மாலை 4 மணி இருக்கும் நானும் டாட் அவர்களும் ஆடுகளங்களை சுற்றிப் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தோம். என்னை அறியாமல் நான் புத்தகம் எழுதப் போவது பற்றி அவரிடம் பேச்சைத் தொடங்கினேன்.

நாடகம் தானே எழுதிக் கொண்டிருந்தீர்கள் இப்பொழுது விளையாட்டு நூல்கள் எழுதப் போகிறீர்களா? என்று என்னை வியப்புடன் கேட்டார்.

so .

நான் சிரித்துக் கொண்டே தலையசைத்தேன்.