பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அந்தக் கருத்துக்கேற்ப ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும் என்று தலைப்பு வந்ததும் தான் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த குழப்பம் கொஞ்சம் வழிவிட்டு விலகிக் கொண்டது.

அடுத்த ஒரு கவலை வந்து அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது.

அதாவது தமிழில் விளையாட்டுப் பற்றிய நூல்களைக் கண்டாக வேண்டுமே?

‘திக் திக் என்று அடிக்கின்ற மனதுடனும், ஆவலுடனும் என் தேடும்படலம் தொடங்கிற்று.

அப்போது, விளையாட்டில் ஏற்பட்ட எனது வலது தோள் மூட்டு வலியைப் போக்க மருந்துகளை நம்பியிருந்தது மாறிப் போய், உடற்பயிற்சி செய்து வலியைப் போக்கலாம் என்ற நம்பிக்கையில் உடற்பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்டிருந்தேன்.

அந்த உடற்பயிற்சிகளை, ஆணழகன் போட்டியில் தமிழ் நாட்டின் வீரனாக வெற்றி பெற்றிருந்த தமிழ் நாட்டில் வீரனாக வெற்றி பெற்றிருந்த மதன்குமார் என்பவரின் பயிற்சி அரங்கில் செய்து கொண்டிருந்தேன்.

அவரிடம் ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று கேட்டபோது, அவரின் குருநாதரைப் பற் நி என்னிடம் பெருமையாகக் கூறியது, இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

சோமசுந்தரச் செட்டியார் என்பது அவர் பெயர், உடற் பயிற்சியை உயிராகக் கொண்டிருந்தவர். மல்லாந்து படுத்துக் கொண்டு, தன் மார்பில் பலகை ஒன்றை வைத்து அதன் மேல்

-