பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

5

l

யானையை ஏற்றி நிற்கச் செய்து சாகச வேலைகள் செய்வதில் சமர்த்தராகவும், வாழ்க்கை நெறியில் சித்தர் போலவும் வாழ்ந்தவர்.

அவர் உடற்பயிற்சியைப் பற்றி ஒரு சிறு கையேடு போல, புத்தகம் ஒன்றை எழுத யாரே மறுப்பவர்? அதில் அவர் உடற் பயிற்சியின் நன்மைகளைப் பற்றி நிறைய எழுதியிருந்தார். உடற் பயிற்சியைப் பற்றி, கேவலமாகப் பேசுபவர்கள், தங்களின் கோண புத்தியை மாற்றித் திருத்திக் கொள்கிற வகையில் ஆணித் தரமான வாதங்களை எழுப்பி, அழகாக விளக்கியிருந்தார்.

அந்த புத்தகத்தை திரு மதன்குமார் அவர்கள் எனக்குத் தந்தார்கள். (திருச்சி விளையாட்டுக் கழகத்தில் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சியாளராகப் புகழ் பெற்றிருந்த மதன்குமார் இன்று அமரராகி விட்டார்.

அந்தப் புத்தகம், எனக்கு ஒரு உற்சாகத்ததை அளித்ததே தவிர, எனக்கு உதவுவதாக இல்லை நான் எழுத முற்பட்டது திறன் நுணுக்கங்களை (Technics) விளக்கும் புத்தகம்.

இதற்கிடையில் நான் சென்னைக்கு வரநேர்ந்த பொழுது, அங்கு எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. அதன் பெயர் பேஸ்கட்பால், இப்பொழுது நாம் கூடைப் பந்தாட்டம் என்று கூறுகிறோமே, அந்த விளையாட்டைப் பற்றி வந்த புத்தகம்

,1...

சென்னையில் உள்ள இலயோலா கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றிய துரைராஜ் என்பவர் எழுதியது.

அவர் விளையாட்டு பற்றிய வழிமுறைகளை தமிழில் விளக்கியிருந்தார். ஆனால் ஆங்கிலக் கலைச் சொற்கள் அனைத்தையும் ஆங்கிலத் தமிழில் எழுதியிருந்தார். ஆங்கிலத் தமிழ் சொற்கள் என்பது ஆங்கிலச் சொல்லை. அப்படியே