பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

கல்லூரியில் லீவு, பணச் செலவு, மன வேதனை - இப்படி பல இழப்புக்களை தொடர்ந்து இழக்கும் பொறுமையை நான் இழந்துபோன சமயத்தில், ஒரு நாள் கண்ணபிரான் என்பவர் வநதார்.

சென்னையிலிருந்து ஸ் போர்ட்ஸ் கம்பெனியின் ரெப்ரசென்டேட்டிவ் அவர் சென்னைக்கு வந்தால், பல உதவிகளைச் செய்து தருகிறேன் வாருங்கள் என்று வாக்குறுதி தந்திருந்தார்.

அவரை நான் சென்னையில் சந்தித்தபோது, அடிக்கடி நீங்கள் சென்னைக்கு வந்துபோவது, சிரமம் மட்டுமல்ல. நீங்கள் எதிர்பார்த்த எதையும் அடைவதும் கஷ்டம் தான். சென்னையிலே நீங்கள் இருந்தால்தான், உங்கள் லட்சியக் கனவு பலிக்கும் என்று, ஒரு யோசனையைக் கூறினார்.

அவர் சொல்வதும் எனக்கு சரியாகவே பட்டது. வீணான அலைச்சல், எதிர்பார்ப்புக்கும் மேலாக மன உலைச்சல், பண இழப்பு. பலநாள் வீண். -

சென்னையிலேயே ஒரு வேலையை பார்த்துக் கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டு அந்த நண்பர், மைலாப்பூரில் உள்ள வித் யாமந்திர் என்னும் பள்ளிக்கு என்னை அழைத்துச் சென்றார். நேர்முகமாகப் பேசும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தார்.

வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் திருமதி சாரி. தலைமை ஆசிரியை திருமதி தாரா சத்ய நாராயணன் இருவரிடமும் பேசிப் பார்த்தேன்.

கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர், அந்த வேலையை உதறிவிட்டு, பள்ளி ஒன்றில் வேலை செய்வதாக இருந்தால், அவர் ஏதோ தவறு செய்து விட்டு மறைப்பதற்காகத் தான் வரவேண்டும். அல்லது கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் அபிப்ராயப் பட்டார்கள்.