பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 97

13. முதல் ஏமாற்றம்

அகில இந்திய வானொலியில் என் பாடல்கள் ஒளிபரப்பாகப் போகின்றன என்ற நம்பிக்கையுடன் நடந்து போன எனக்கு, உயர்திரு அய்யசாமி என்பவர் கொடுத்த அதிர்ச்சியானது எனக்குக் கொஞ்ச நஞ்சம்’ இருந்த ஆசையை கூட, கவ்விக் குதறி, வெளியே தூக்கி எறிந்து விட்டன.

என் இளமைப்பருவம் தந்த பயமறியா கோபத்தால், நீ இந்த இடத்தை விட்டு ஒழிந்தால் தான், நான் மீண்டும் இந்த நிலையத்திற்குள் நுழைவேன்’ என்று வார்த்தைகளைக் கொட்டி விட்டு வந்தேன். அதற்குப் பிறகு வானொலி ஆசையையே மறந்து போனேன்.

இந்த மூன்றாண்டு காலத்திற்குள் சென்னை அனுபவங்கள் எனக்கு நிறையவே ஏற்பட்டன.

பள்ளியில் பணியாற்றிக் கொண்டே சினிமாவில் சான்ஸ் வாங்கி முன்னுக்கு வந்துவிட வேண்டும், இலக்கியத்துறையில் ஒர் உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளவேண்டும். வசதியாக வாழ, பணத்தை நிறைய சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இதுதான் என் லட்சிய வெறியாக இருந்தது.

சினிமா சான்ஸ் வாங்கித் தருகிறேன் என்று. கலையிலடித்த சக் கியம் செப்க கரும ப் பிரபுக்கள் நிறைய