பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 37 SERVE SITEIT GE ஆரம்ப காலத்தில், புதிய புதிய விளையாட்டுக்களை பிரபு குடும்பத்தினரும் அரச குடும்பத்தினருமே மேல் காடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் ஆடி வந்தார்கள். உதாரணமாக, டென்னிஸ் ஆட்டம். வசதி படைத்தவர்கள் எதையும் குனிந்து நிமிர்ந்து செய்யக் கொஞ்சம் சோம்பல்படுவது சகஜம்தானே! வி2ளயாடவந்த அரச குடும்பத்தினர், வலைக்கு இரு புறமும் உள்ள ஆடுகளப் பக்கங்களில் வந்து கின்று கொள்வார்கள். தாங்கள் பந்தை அடித்து ஆடத் தயாரானதும், ஆடுகளத்திற்கு வெளியே கிற்கும் வேலையாளே அழைத்து, பந்தை ஒரு புறம் எறியச் சொல்வார்கள் அவன் பந்தை ஒருபுறம் எறிந்தபிறகு பந்தை தங்கள் மட்டையால் மறுபுறம் அடித்தாட இவ்வாறு ஆட்டம் தொடரும். ஆக, ஒவ்வொரு முறையும் பந்தை மட்டையால் அடித்தாடத் தொடங்குவதற்கு முன்னர், வேலைக்காரனே பந்தை SERVE செய்ததால் அதனை SERVE என்று முதலில் அழைக்தத் தொடங்கினர். வேலைக்காரர் மேசைமேல் உணவு பரிமாறுவது போல், விளையாடுவதற்கும் பந்தைக் கொடுத்துதவிய தால், அதே SERVE என்ற வார்த்தை இங்கேயும் வந்து விட்டது. ஆட்டத்தைத்தொடங்க பந்தை அடிக்கும் வேகமும் விறுவிறுப்பும் கூடிவிட்டாலும், அதே பழையபாணி பெயரான SERVE SERVICE என்ற பெயரே இன்றும் கின்று நிலைத்துவிட்டது.