இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
காட்சிக்கு இனியது விளையாட்டு
காட்சியர் ஆக்கிடும் விளையாட்டு
காவியச் சுவைதரும் விளையாட்டு
காதலின் இதந்தரும் விளையாட்டு
காற்றெனப் பயன்தரும் விளையாட்டு
காற்றாடிக் கவர்ச்சிக்கும் விளையாட்டு
காந்தியை வளர்க்கும் விளையாட்டு
காந்தமாய் கவரும் விளையாட்டு
காலியை மாற்றும் விளையாட்டு
காசையும் கொடுக்கும் விளையாட்டு
காதவம் போன்றது விளையாட்டு
காடகம் வாழ்க்கைக்கு விளையாட்டு
கானமாய் மயக்கும் விளையாட்டு
காலத்தின் அனுபவம் விளையாட்டு
அரும்பொருள்:
காட்சியர்-அறிஞர் காதவம்-ஆலமரம் காந்தி-அழகு, ஒளி காடகம்-ஆடை
காலி-உபயோகமற்றவன் கானம்-பாட்டு