உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

விளையாட்டு ஆத்திசூடி

சே :

சேர்ந்தாரை அறிந்திட விளையாட்டு சேட்டைகள் விரிந்திட விளையாட்டு சேதங்கள் தவிர்த்திட விளையாட்டு சேதிகள் சேர்த்திட விளையாட்டு சேணமாம் முரடர்க்கு விளையாட்டு சேடியே நலிந்தோர்க்கு விளையாட்டு சேமமாய் வாழ்ந்திட விளையாட்டு சேமிக்கும் பண்புக்கு விளையாட்டு சேவகன் உதவிபோல் விளையாட்டு சேவிக்க வைத்திடும் விளையாட்டு சேவைநல் குணத்திற்கு விளையாட்டு சேவல் நடைகொள்ள விளையாட்டு சேர்வாரை உயர்த்தும் விளையாட்டு சேடுதினம் தரும் விளையாட்டு

அரும்பொருள்

சேடு-அழகு, நன்மை, பெருமை