இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44
விளையாட்டு ஆத்திசூடி
- தி :
தீக்குணம் தகர்த்திட விளையாட்டு தீங்குகள் தவிர்த்திட விளையாட்டு தீபத்தின் தூய்மைக்கு விளையாட்டு தீரம் வளர்த்திட விளையாட்டு தீாக்கத் தரிசனம் விளையாட்டு தீவனம் உணர்ச்சிக்கு விளையாட்டு தீவிர முன்னேற்றம் விளையாட்டு தீர்த்தப் புனிதம்போல் விளையாட்டு தீயோரைத் தெரிந்திட விளையாட்டு தீர்வுகள் கண்டிட விளையாட்டு தீஞ்சொல் செழுமைக்கு விளையாட்டு தீர்ப்புக்கோர் மன்றம் விளையாட்டு தீட்டிடும் இளமையை விளையாட்டு தீசகன் ஆக்கும் விளையாட்டு
அரும்பொருள் தீஞ்சொல்-இனியசொல்
தீசகன்-ஆலோசனையுள்ளவன்