பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை


விளையாட்டுத் துறை இலக்கியத்தில் எழுந்த தமிழ் நூல்களில் இந்த நூல் ஒரு புதிய முயற்சியாகும்.


விளையாட்டு விழாக்கள் நடைபெறுகின்ற பொழுது சொற்பொழிவாற்ற வருகின்றவர்கள், பேச்சுக்கிடையில் 'சுவரை வைத்துத்தான் சித்திரம், நல்ல உடல் நல்லமனம், நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்' என்பன போன்ற கருத்துக்களையே திரும்பத் திரும்ப பேசுவதை பல முறை கேட்டிருக்கிறோம்.


இத்தகைய பேச்சுக்களை கேட்கின்ற பொதுமக்களும், விளையாட்டு விழா என்றால் இப்படித்தான் சொற்பொழிவு அமைந்திருக்கும் என்று முன் கூட்டியே முடிவு செய்து விட்டு, பேசுவோர்க்கிடையே தாங்களும் பேசிக்கொண்டு பொழுது போக்குவதும் உண்டு. *


அத்தகைய ஒரு சூழ்நிலையை ஆத்திசூடி மாற்றியமைத்து, மேடைப் பேச்சில் விளையாட்டுத் துறைபற்றிய விளக்கம் தர உதவும் என்ற உண்மையான நம்பிக்கையுடன் ஆத்திசூடி நூலை உருவாக்கி இருக்கிறேன்.


ஒளவை பாடிய ஆத்திசூடியை யார்தான் மறக்க முடியும்? ஓரிரு சொற்களில் உலகையே விளக்கிக் காட்டுகின்ற ஒப்பற்ற அமைப்பிலே உருவாகிய ஆத்திசூடி முறையை என் மனதிலே பதித்து வைத்துக் கொண்டேன். ஒரு வரியிலே சொல்லத் தெரியாத எனக்கு, ஆங்கிலப் பாடல் ஒன்றின் வடிவம் எனக்கு ஞாபகம் வந்தது, அதாவது 14 அடிகள் உடைய சானட்' என்ற பாட்டு முறை அது. ஆகவே, ஒவ்வொரு சொல்லுக்கும் 14 வரிகள் கொண்ட :: உருவாக்கிச் சொல் லியிருக் கிறேன. எனது விளையாட்டுத்துறைப் பற்று இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட வைத்திருக்கிறது.


விளையாட்டுக்களின் பெருமையைச் சொல்வதற்கு இதைவிட சிறந்த வழி எனக்குப் புலப்படவில்லை. ஆசையின் காரணத்தால் ஆரம்பித்துவிட்ட நான், புதிய புதிய சொற்களுக்காகவும், கருத்துக்களுக்காகவும் பெரிதும் அலையத்தான் நேரிட்டது, என்றாலும் சமாளித்துக் கொண்டு, ஓரளவு முடித்து விட்டேன்.


நூல் எப்படி இருக்கிறது என்று வாசகர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று நீங்கள் நினைப்பது கூட, என் முயற்சியை ஆதரித்ததாகவே இருக்கும் என்று நம்புகிறேன்!