இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
ஏன் எழுதவேண்டும் என்று கேட்பவர்களும் இருக்கின்றார்கள். என் மனதிலே உதித்த கருத்துக்களை வெளிப்படுத்த எனக்கு ஆன்ம பலத்தையும், பொருள் வளத்தையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதற்காக இந்நூலை உருவாக்கியிருக்கிறேன் என்றால் அது தான் உண்மை.
எப்படியெல்லாம் விளையாட்டுக்களின் பெருமையை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்பினேனோ, அப்படியெல்லாம் சொல்லியிருக்கிறேன். வார்த்தைகளும், என்னுடன் வந்து ஒத்துழைத்து இடம் பெற்றுக் கொண்ட விந்தையை நானும் உணர்ந்து வியந்து போனதுண்டு.
விளையாட்டுத் துறையில் நூறு நூல்கள் எழுதுவதற்கு என்னை உற்சாகப் படுத்திய வாசகள்கள் அனைவருக்கும் என் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். - என் முயற்சிகளை இகழ்ச்சியாகப்பேசி, என்னை துயரப்படுத்த முயன்றவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி. ஏனென்றால், அவர்கள் தான் என் லட்சியம் சிதைந்து போகாமல் உணர்ச்சி பூர்வமாகக் காத்து உழைத்திட உதவிய உத்தமள்கள். அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைக்கிறேன்.
விளையாட்டுத்துறையில் பணியாற்ற வந்த நாளிலிருந்து இன்று வரை எனக்கு ஆக்கப்பூர்வமான உதவிகள் அனைத்தும் செய்து, ஆதரித்து அன்பு காட்டி வரும் எனது குருநாதர் டாக்டர் M. ராப்சன் அவர்களை நன்றியுடன் நினைத்து மகிழ்கின்றேன்.
இந்நூல் அழகுற அச்சிட உதவிய செல்வன் R. ஆதாம் சாக்ரட்டிசுக்கும், செல்வி C. கெளரிக்கும், நல்ல முறையில் அச்சிட்ட கிரேஸ் பிரிண்டாசுக்கும் என் இதயங் கனிந்த நன்றி.
தமிழ்த் தாயின் தளிர்ப் பாதங்களில் மீண்டும் ஒரு விளையாட்டுத்துறை தமிழிலக்கிய நூல் ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றேன். மேலும் என் கரங்களுக்கு வலுவூட்டும் அன்பர்கள் அனைவர்க்கும் நன்றி கூறுகிறேன்.
வணக்கம்,
அன்பன்
எஸ். நவராஜ் செல்லையா
1988 ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்தபோது எழுதப் பட்ட ஆசிரியரின் முன் னுரை அப்படியே இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இந்நூல் முக்கிய இடம் பெறும் என நம்புகிறோம். - பதிப்பாளர்