இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா 95.
...வே.:
வேகம் கொடுப்பது விளையாட்டு வேடிக்கை மகிழ்ச்சிக்கு விளையாட்டு வேட்டையின் ரசிப்புக்கும் விளையாட்டு வேண்டும் நலம்தரும் விளையாட்டு வேதங்கள் கருத்துக்கு விளையாட்டு வேதனை மாற்றிடும் விளையாட்டு வேதாகமம் ஆகும் விளையாட்டு வேதாந்தி ஆகவும் விளையாட்டு வேர்வையின் வெளிப்பாடு விளையாட்டு வேந்தனாய் சிறப்பிக்கும் விளையாட்டு வேய்ங்குழல் இனிமைக்கு விளையாட்டு வேல்மதிக் கூர்மைக்கு விளையாட்டு வேற்றுமை வீழ்த்திடும் விளையாட்டு வேறென்ன தாய்வீடு விளையாட்டு