பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சக்தியின் சாதன! அந்த இளைஞனுக்கு ஒட்டப் பந்தயங்களில் அவ்வளவாக அனுபவமில்லைதான். என்ருலும், இளமையின் வேகத்தில், கரைபுரண்டு காட்டாருக ஒடுகின்ற உற்சாகத்தின் எழுச்சியில், தன் காட்டிலே ஒட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, வெற்றி வீரனுகிவிட்டக் காரணத்தால், ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்கின்ற வாய்ப்பினையும் பெற்று விட்டான். பள்ளிக்கூடத்தில் படிக்கும் 17வயதுமாணவனுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு பார்த்தீர்களா! 1912ம் ஆண்டில், ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் எனும் இடத்திலே நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில்தான், அந்த இளைஞன் இவ்வரிய அதிர்ஷ்டம் கிறைந்த வாய்ப்பினைப் பெற்ருன். அந்த இளைஞனுடன் அனுபவம் நிறைந்த இன்னெரு பெரிய வீரனும் இருந்தான். தான் ஓடுகின்ற 800 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் எப்படியாவது வென்று, தங்கப்பதக்கத்தைக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற தணியாத பேராவலுடன் அவன்