பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இனிக்காத இன்பம்! வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்கள் எல்லோரும் விவரிக்க இயலாத ஒருவித மனேகிலேயில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒலிம்பிக் பக் தய. அரங்கிலே கூச்சலுக்குப் பஞ்சமா என்ன? அவர் களுக்கும் பொழுது போயாக வேண்டுமே! ஆனல், அங்கு கத்தியவர்கள் காரணத்தோடுதான் அதைச் செய்துகொண்டிருந்தார்கள். உலக நாடுகளி லேயே சிறந்த வீரர்கள் கலந்துகொள்ளும் உக்கிரமமான போட்டிகள் நடைபெறுகின்ற இடம் அல்லவா அது: அவர்களே உற்சாகப்படுத்தவா அந்தச் சத்தம் என்ருல், அதுவும் அல்ல! அநியாயத்தை எதிர்த்தே அந்த ஆர்ப்பாட்டமான சத்தம் சமுத்திரம்போல் எழும்பிக் கொண்டி ருந்தது. அப்படி என்ன அகியாயம் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நடக்க, என்று கேட்க வேண்டும்போல் தோன்றுகிறதல்லவா? இப்படி ஒரு அகியாயம் எந்தப் போட்டியிலும் நடக்கவே இல்லை.