பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
99
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
 

நடத்தப்படவில்லை. ஆனால் வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். பெண்களே போய்விடுங்கள் என்று மரண தண்டனையைக் காட்டி பயமுறுத்தும் காலம் மலையேறிப் போய், வேடிக்கை பார்க்க வாருங்கள் என்று விரும்பி அழைக்கின்ற காலமும் வேகமாக வந்து சேர்ந்தது.

பெண்கள் விடுவார்களா என்ன? ஏன் எங்களுக்கும் ஒலிம்பிக் பந்தயங்களில் இடம் இல்லை? வாய்ப்பு மறுக்கப்படுகிறது? நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை, என்று பேசிப் பேசி, பின்னர் போராட்டம் நடத்தத் தொடங்கி விட்டார்கள். பணிந்து விட்டது ஆண்கள் இனம். அதிகாரிகள் குழாம் . 1896ல் தான் முதல்பந்தயங்கள் நடத்தப்பட்டன. 1900ம் ஆண்டு நடந்த இரண்டாவது ஒலிம்பிக் பந்தயங்கள் பாரிசில் நடத்தபட்டபொழுது, டென்னிஸ், கோல்ஃப் போன்ற ஆட்டங்களில் மட்டுமே பெண்கள் போட்டியிட அனுமதிக்கபட்டனர். அதில் 11 பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முதன் முதல் ஒலிம்பிக் பந்தயங்களில், தங்கப் பதக்கம் பெற்ற பெருமையை உடையவள், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை விர்லே கூப்பர் (Shirley Cooper).

ஏனோ தெரியவில்லை மற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் இது தொடரவில்லை. 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் பெண்களுக்கான போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு என்று 5 ஓட்டப் பந்தய நிகழ்ச்சிகளே புகுத்தப்பட்டன.

100 மீட்டர் ஓட்டம், 800 மீ. ஓட்டம், 4x100 மீட்டர் தொடரோட்டம், உயரத் தாண்டுதல், தட்டெறிதல் ஆகிய