பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
38
 


கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக விளங்கினார். 48 டெஸ்ட் மேட்சுகளுக்கும் நடுவராகப் பணியாற்றினார்.

இவ்வாறு 30 ஆண்டுகள் கிரிக்கெட் நடுவராகப் பணியாற்றி, கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமல்ல, உலக சரித்திரத்திலும் 'சிறந்த நடுவர். மரியாதைக்குரிய நடுவர், திறமையான நடுவர் 'என்ற புகழுடன்1955ம் ஆண்டு, நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

புகழ்பெற்ற நடுவராகப் பேறுபெற்ற செஸ்டர், கிரிக்கெட் ஆட்டத்துடன் இணைக்கப்பெற்ற புகழாளராகவே இன்றும் விளங்குகிறார் உள்ளத்தில் உறுதியும் உண்மையான உழைப்பும் இருந்தால், இலட்சியம் என்றும் தோற்பதில்லை என்ற சொல்லுக்கு சான்றாகத் திகழும் செஸ்டரை, நாமும் பாராட்டுவோம்.