பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.



67
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


பக்கமாகப் பறந்தோடினர். என்றாலும் இந்த நிலையை எதிர்பார்க்காத ஒரு வயது முதிர்ந்த ரசிகர், ஹான்பி மோதிய வேகத்தில் படுகாயம் அடைந்து போனார்.

இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை பயத்துக் குள்ளாக்கியது. இதன் காரணமாக 1866ம் ஆண்டு, லார்டு மைதானத்தில் எல்லைக்கோடு ஒன்று இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து முடிவும் எடுக்கப்பட்டது. அதுவும் ஈடனுக்கும் ஹாரோ எனும் குழுவுக்கும் நடந்த போட்டியில் தான் முதன் முதலாக எல்லை குறிக்கப்பட்டது.

1884ம் ஆண்டு எல்லைகள் இருக்க வேண்டும் என்றவிதி கட்டாயமாக்கி உருவாக்ப்பட்டது. என்றாலும், மேலும் 73 ஆண்டுகள் ஆட்டம் அப்படி அப்படியே தொடர்ந்து தான் வந்தது 1957ம் ஆண்டுதான், பந்தாடும் தரையின் மையத்திலிருந்து 75 கெஜதூரம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்ப்பட்டது.

ஒன்று நடந்தால்தான் ஒன்று உருவாகும் எனும் மொழிக்கேற்ப, பார்வையாளர் ஒருவரின் படுகாயத்திற்குப் பிறகுதான் மைதான எல்லை வேண்டும் என்று வந்தது. அதுவே 4 ஓட்டங்கள், என்று உருவாக்கவும் வழியமைத்துத் தந்து ஆட்டத்தில் மறுமலர்ச்சியை ஊட்டி விட்டது.