பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
89
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


ஒன்று சேர்த்து ஒரு பிரிவு. இலியானா உயரத்திற்கு ஒத்தவர்களை வைத்து மற்றொரு பிரிவு.

இதைப்பற்றி இலியானாவிடம் கேட்டபொழுது, 'இது பயன்படாத திட்டம். இது நல்ல திட்டம் அல்ல' என்பதாகப் பதிலளித்தாள். கூடைப் பந்தாட்டத்தில் உள்ள திரில் போய்விடுகிறது. இந்த ஆட்டத்தில் உள்ள வீரமு89 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாம் போட்டியும் திகில் நிறைந்த சாகசமும் குறைந்து போகின்ற அளவில்தான் இது கொண்டு போகும்.

மற்றவர்கள் அதாவது குள்ளமானவர்கள் கையில் பந்து கிடைத்தால் குனிந்து கைநீட்டித்தானே பந்தெடுக்க முடியும்! அதுவும் கஷ்டம்தானே! அவரவருக்குரிய கஷ்டம் இருக்கத்தானே இருக்கிறது!

நான் உயரமாய் வளர்ந்திருக்கிறேன் என்றால் 'அது என்னுடைய தவறு அல்லவே! அது என்னுடைய குற்றம் இல்லையே என்று கூறும் இலியானாவின் கூற்று சரிதானே!

திறமையை வைத்து ஆட்டக்காரர்களைப்பிரிக்கின்ற காலம்போய், உயரத்தை வைத்துப் பிரிக்கின்ற காலமும் வந்துவிட்டது பார்த்தீர்களா! கூடைப் பந்தாட்டம் உயரமானவர்களின் ஆட்டம் என்ற கூற்று ஒன்று இருக்கிறது! அது இனி நிலைக்குமோ என்னவோ!