பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.நிலையும் எரிச்சல் மூட்டியதோ என்னவோ போட்டியை ஆரம்பியுங்கள் என்று கூச்சல்போடத் தொடங்கினர்.

மழையினால் விளையாடும் பரப்பு பாதிக்கப்பட்டி ருக்கிறதா என்பதைக் காணவும் நிர்ணயிக்கவும், முக்கிய அதிகாரிகள் சிலர் பந்தாடும் பரப்பு (Pitch) நோக்கிப் போய், நிலையினை அறிய நின்று கொண்டிருந்தனர்.

அந்த இடைவெளி நேரத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத பேரார்வம் மிகுந்த பார்வையாளர்களில் சிலர், பாய்ந்து அதிகாரிகளை நோக்கி ஓடினர். அதாவது, அதிகாரிகளைச் சுற்றி முற்றுகையிட்டுக் கொண்டு நின்றனர்.

பந்தடிக்கும் பரப்பில் தண்ணிர் தேங்கியிருப்பதைப் பார்த்தனர். அந்தத் தண்ணிரைப் போக்க வேண்டு மானால், சாக்கு போன்ற துணிகளை நனைத்து நனைத்து வெளியே பிழிந்து விடலாம். அதற்காக அங்கே எந்தவிதமான சாதனமும் இல்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

உடனே, அவர்கள்தாங்கள் அணிந்திருந்தகோட், மற்றும் சட்டைகளைக் கழற்றி, இதனை உபயோகித்து, ஆட்டத்தை ஆரம்பியுங்கள் என்று கூறத் தொடங்கினர்.

அவர்களின் ஆர்வத்தையும், ஆட்டத்திற்காகத் தாங்கள் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் மனப்பான்மையும் கண்டு மகிழ்ந்த அதிகாரிகள், அவர்களது கோட்டையும் சட்டைகளையும் வாங்கிக் கொள்ள மறுத்தனர்.

காலை பத்து மணிக்குத் தொடங்க இருந்த ஆட்டத்தை மாலை 3.45க்குத்தான் தொடங்கினர். தாமதமாகத் தொடங்கினாலும், ஆட்டம் தொடங்கியதே என்று ஆர்வமுள்ள ரசிகர்கள் அனைவரும் ஆனந்தமடைந்தனர்.

மேல் சட்டைகளைக் கழற்றித் தந்த மேல்நிலை பார்வையாளர்களைப் பார்த்தோம். இன்னும் சில போட்டி