பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. வீராதி வீரன் மிலோ



பாரதக் கதையிலே வரும் கதாநாயகர்களில் வலிமைக்குப் புகழ் பெற்றவன் பீமன். அவன் உண்ணும் உணவையும், பண்ணிய யுத்தங்களேயும் பார்க்கும்பொழுது, நம்மையறியாமலேயே ஒரு வீர' எழுச்சியினைப் பெறுவதும் உண்டு.

வண்டி வண்டியாக சோற்றை உண்டு, குடங் குடமாகப் பால் தயிர் குடித்து, மரங்களைப் பிடுங்கி, மலைகளைக் கிள்ளி பகாசுரனேடு சண்டை போட் டான் என்று படிக்கும்பொழுது, இப்படியும் ஒரு மனிதன என்று எண்ணுகிருேம். புராணக் கதையின் புகழ் பெற்ற வீரனை பீமன், பலவான் என்கிற பெரும் புகழ் பெற்றவகை இன்றும் மிளிர்கிருன்.

அதேபோல, இராமாயணத்தில் வரும் அனுமனின் ஆற்றலும் அளவிடற்கரியதாகும். சஞ்சீவி மலையையே கையால்பெயர்த்தெடுத்துச் சென்றதும், இலங்கைக்குச்