பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17



செல்லக் கடலைத் தாண்டிச் சென்றதும் எல்லாம் அனுமனின் வீர தீர நிகழ்ச்சிகளாகும்.

உண்மையாக நடந்ததென்று உலகிலே பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும் பழைய ஒலிம்பிக் பந்தயங்களிலே, பீமனையும் அனுமனையும் மிஞ்சுகின்ற அதிக சாகசங்கள் புரிகின்ற ஒரு வீரனக அறிமுகப்படுத்தப் பட்டிருக் கிருன் வருணிக்கப்பட்டிருக்கிருன் இந்த மிலோ.

அவன் வீரக் கதையைப் படியுங்கள்.

கிராட்டன் (Croton) எனும் நகரத்தைச் சேர்ந் தவன் மிலோ. இந்தக் கிராட்டன் நகரம் தென் இத்தா லியில் உள்ளது, கீர்த்தி மிக்க வீரர்களை கிரேக்கத்தின் ஒலிம்பிக் பந்தயங்களுக்குப் பலமுறை அனுப்பி, வெற்றி பெறச் செய்து, புகழ் பெற்று விளங்கிய நகரம்தான் கிராட்டன். என்ருலும். மிலோ திறமை மிக்க வீரனுக வந்து, ஒலிம்பிக் பந்தயங்களில் பல முறை வெற்றிகளைப் பெறத் தொடங்கியதும்தான், கிராட்டன் நகரம் பெரும் புகழ் பெற்றது என்கிற அளவுக்கு மிலோவின் வெற்றிப் பட்டியல் நீண்டு சென்றது. நிலைத்து நின்றது.

கி. மு. 576 ஆம் ஆண்டு கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கு, கிராட்டனிலிருந்து 6 வீரர்கள் சென்றனர். அவர்கள் 6 பேரும் ஒட்டப் பந்தயத்தில் முதலாவது வந்த ஏழு பேர்களில் இடம் பெற்று இருந் தனர் என்பது வரலாறு. இதுபோன்ற வெற்றி மிகுந்த வீர சாதனை, இன்றைய முன்னணி நாடுகளான ரஷ்யாவும், அமெரிக்காவும் தங்கள் வீரர்களை அனுப்பிக் கூட செய்ததில்லை எனவும் பல வரலாற்ருசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர்.